Friday, September 6, 2013

பி.எஸ்.இ. இன்ஸ்டிடியூட்: தபால் வழியில் பங்குச் சந்தை பட்ட மேற்படிப்பு டிப்ளமா

BSE Institute
தபால் மூலம் பங்குச் சந்தை குறித்த பட்ட மேற்படிப்பு டிப்ளமாவை (PGDSM) பி.எஸ்.இ. இன்ஸ்டிடியூட் (BSE Institute) அறிமுகப்படுத்தி இருக்கிறது.தபால் மூலம் பங்குச் சந்தை குறித்த பட்ட மேற்படிப்பு டிப்ளமாவை (PGDSM) பி.எஸ்.இ. இன்ஸ்டிடியூட் (BSE Institute) அறிமுகப்படுத்தி இருக்கிறது.                       
இது இந்தியர்கள் பங்குச் சந்தை குறித்து அறிந்துக் கொள்ளும் அதே நேரத்தில் வேலை வாய்ப்பை பெற்று தரும் நிபுணத்துவம் வாய்ந்த படிப்பாக இருக்கிறது.
பி.எஸ்.இ. இன்ஸ்டிடியூட் -ன் நிர்வாக இயக்குநர் அம்பரிஷ் தத்தா கூறும் போது, இந்தியாவில் பங்குச் சந்தையில் சிறு முதலீட்டாளர்களின் பங்களிப்பு குறைவாக இருக்கிறது. அதை அதிகரிக்க இந்த படிப்பு உதவும்’’ என்றார்.               
பங்குச் சந்தை குறித்த பட்ட மேற்படிப்பு டிப்ளமா இரண்டு செம்ஸ்டர்களை கொண்டது. படிப்பு முடிப்பவர்களுக்கு பி.எஸ்.இ. இன்ஸ்டிடியூட் மற்றும் இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலைக் கழகம் (IGNOU) இணைந்து டிப்ளமா வழங்கும். காலாண்டுக்கு ஒரு முறை நேர்முக வகுப்புகளும் நடத்தப்படுகிறது. 
மேலும் விவரங்களுக்கு http://pgdsm.bsebti.com/
சேர்க்கை தொடர்பான விவரங்களுக்கு  http://pgdsm.bsebti.com/addprocedure.html
வேலைவாய்ப்பு தொடர்பான விவரங்களுக்கு http://pgdsm.bsebti.com/careers.html

No comments:

Post a Comment